in

ஆசிரியர் பக்கம் – August 2020

ஆசிரியர் பக்கம் (Aug 2020)

அனைவருக்கும் வணக்கம் 🙏 ,

சஹானா இணைய இதழுக்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்  💐

சில வருடங்களாய் இணையத்தில் எழுதி வந்தாலும், சஹானா இணைய இதழின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி

வாசிப்பு என்பது, கற்றுக் கொள்ளவோ, பொழுது போக்கவோ என்றில்லை. வாசிப்பு என்பதே ஒரு அனுபவம் தான்

எனவே, குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துங்கள். அது அவர்கள் வாழ்க்கையையே மாற்றி விடும்

ஒவ்வொரு கதையும், கட்டுரையும், புத்தகமும் நிச்சயம் நமக்குள் ஒரு சிறிய மாற்றத்தையேனும் ஏற்படுத்தும். வாசிப்பு பழக்கம் உள்ளவர்களால் அதை உணர முடியும்

புத்தகம் வாசிக்கும் பழக்கம், எனக்கு என் அம்மாவிடமிருந்து வந்தது. அம்மா மட்டுமின்றி, பெரியம்மா, மாமாக்கள் எல்லோரும் கூட, புத்தக வாசிப்பில் விருப்பமுள்ளவர்கள் தான்

அதனாலோ என்னவோ, பள்ளி நாட்கள் தொட்டே, புத்தகம் படிப்பது எனக்கு பிடித்தமான ஒன்றாய் இருந்தது. இது தான் என்றில்லை, கிடைக்கும் எல்லாவற்றையும் படிப்பேன்

“கண்டது கற்க பண்டிதன் ஆவான்” என்றொரு பழமொழி உண்டு. பண்டிதனானேனோ இல்லையோ, வீட்டில் புத்தக அலமாரிகள் புதிது புதியதாய் முளைத்துக் கொண்டிருப்பது நிஜம் 😊

எனக்கு நினைவு தெரிந்து, பத்து வயது பிராயத்தில் விடுமுறைக்கு மாமா வீட்டுக்கு செல்லும் போதில், தினமலரின் இலவச இணைப்பான சிறுவர் மலரில் தொடங்கியது எனது வாசிப்புப் பழக்கம்

அதன் பின் பதின்ம வயதில், குமுதம் விகடன் என வெகுஜன பத்திரிகைகளை வாசிக்கத் தொடங்கினேன்

கல்லூரி பருவத்தில், கண்மணி மாலைமதி ராணிமுத்து இதழ்களில் வரும் ரமணிச்சந்திரன், சிவசங்கரி, இந்துமதி, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றோரின் நாவல்கள், வாசிக்கக் கிடைத்தன

பின் Nora Roberts, Debbie Macomber, Susan Mallery என ஆங்கில நாவலாசிரியர்களின் நாவல்களையும், Harlequin / Mills and Boon Collections என எதையும் விட்டு வைக்கவில்லை

நான் ரசித்து வாசித்த அதே கண்மணியில்,  சென்ற ஆண்டு நாவல் போட்டியில் வெற்றி  பெற்று, எனது நாவல் பிரசுரிக்கப்பட்டபோது, மிகவும் மகிழ்வாய் உணர்ந்தேன்

அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டுமென்ற உந்துதலை ஏற்படுத்தியது, அந்த போட்டியில் பெற்ற வெற்றி தான்

வாசிப்பு சரி, நான் எழுதிய முதல் கதை எதுவென யோசித்துப் பார்க்கிறேன்…

தமிழ் எழுத்துப் பயிற்சி என்பது, எங்கள் பள்ளியில் கட்டாயமான ஒன்று. இரண்டு வரி நோட்டுப் புத்தகம் ஒன்று அதற்காகவே வாங்குவோம்

பெரும்பாலும் பாட புத்தகத்தில் உள்ள ஏதேனும் ஒன்றை பார்த்து, அப்படியே எழுதுவது தான் வழக்கமாய் இருந்தது

நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, எங்கள் தமிழாசிரியர் ராசப்பன் அவர்கள், “எழுத்துப் பயிற்சி செய்யும் நோட்டுப் புத்தகத்தில், வெறுமனே புத்தகத்தைப் பார்த்து எழுதாமல், உங்களுக்கு தோன்றும் கதை அல்லது கட்டுரை ஏதேனும் எழுதுங்கள்” என்று கூறினார்

பாடத்தையே கதையாய் எழுதும் என்னை போன்றவர்களுக்கு, கதையே எழுதச் சொன்னால் கசக்குமா? 😃

“கண்ணாடி மாளிகை” என்ற பெயரில், ஒரு திகில் கதை எழுதத் தொடங்கினேன். தினமும் ஒரு பக்கம் தான் எழுத வேண்டும்

நாள்தோறும் நான் எழுதி முடித்ததும், அதை எனது நெருங்கிய தோழமைகள் சிலர் ஆர்வமாய் வாசித்தனர்

அவர்களுக்கு நினைவிருக்குமா என தெரியவில்லை? எனக்கும் கூட நினைவிருக்கவில்லை. சில வருடம் முன்பு, எங்கள் அம்மா வீட்டு பரணில் எனது ஏழாம் வகுப்பு Rough Note கிடைத்தது

இரண்டு வரி நோட்டு புத்தகத்தில் எழுதுவதற்கு முன்,  கதையை  Rough Noteல் கிறுக்கி இருக்கிறேன்.  அதைப் பார்த்ததும் தான், எனக்கே இப்படி ஒன்று எழுதியது நினைவுக்கு வந்தது

இப்போது படித்துப் பார்த்தால், சிரிப்பை வரவழைக்கிறது அந்த கதை. ஆனாலும், அப்போதே ஏதோ எழுதி இருக்கிறோம் என மகிழ்வாகவும் உணர்ந்தேன்

பன்னிரெண்டு வயதில் எழுதிய அந்த கதையின் ஒரு பக்கம் இதோ …

படித்தால் சிரிப்பாய் தான் இருக்கிறது இல்லையா? ஆனால், எழுதுவதற்கான விதை அங்கு தான் விழுந்ததென நினைக்கிறேன்

அந்த விதை இன்று, “சஹானா இணைய இதழாய்” பரிணாம வளர்ச்சி அடைந்து நிற்கிறது

கதை, கவிதை, பயணம், சமையல், Ebooks, நகைச்சுவை, சிறுவர் பக்கம் என பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமின்றி, மாணவர்களுக்கான மென் திறன் பயிற்சி (Soft Skills Training), பெற்றோருக்கான உளவியல் தொடர், சுயமுன்னேற்றக் கட்டுரைகள், ஆன்மீகம் என பலவும் “சஹானா இணைய இதழில்” சேர்க்கப்பட்டுள்ளது

இன்னும் நிறைய பகுதிகள் சேர்க்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்

இணைய இதழ் ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியதும், அதை முதலில் என் கணவரிடம் தான் பகிர்ந்தேன்

மகிழ்வுடன் அதற்கான முயற்சிகளில் கை கொடுத்தார். அதோடு, இந்த இணையப்பக்க வடிவமைப்பு  (Website Design) பெரும்பாலும் அவரின் கைவண்ணம் தான். அதற்கு அவருக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் இந்த தருணத்தில் 🙂

வாசித்தமைக்கு நன்றி

சஹானா இணைய இதழில் பதிவுகள் வெளியிடப்படும் போது, Auto Notification மூலம் Email பெற விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை (Link) கிளிக் செய்து, Subscribe செய்யலாம். நன்றி

https://sahanamag.com/subscribe/

இன்றைய உள்ளிருப்பு நிலை மாறி, விரைவில் இயல்புக்கு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்

என்றும் நட்புடன்,

சஹானா கோவிந்த்

Email – editor@sahanamag.com

Click here to connect to Sahana Magazine’s Facebook Page  

Click here to connect to Sahana Magazine’s Twitter Page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

17 Comments

  1. சாஹானா உங்களது புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும்

  2. வாழ்த்துகள்! பன்னிரண்டு வயதில் உங்கள் கையெழுத்து சிறப்பாக இருக்கிறது. நானும் பன்னிரண்டு வயதில்தான் விளையாட்டாய் கோகுலம் இதழ் வாசித்து எழுதத் துவங்கினேன். இப்போது தேன்சிட்டு என்ற இணையதளமும் அதே பெயரில் மின்னிதழும் நடத்தி வருகிறேன். தளிர் என்ற வலைப்பூ நடத்தி வருகிறேன். உங்களின் சில பதிவுகள் வலைப்பூவில் வாசித்தும் இருக்கிறேன்! உங்களின் இந்த புதிய இணைய இதழ் வெற்றி பெற வாழ்த்துகள். இயன்றால் தேன்சிட்டு இணையதளம் https://thenchittu.com/ பக்கம் வந்து வாசிக்கவும். நன்றி.

    • வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிங்க. தேன்சிட்டு, தளிர் இரண்டுமே வாசித்திருக்கிறேன். அதுமட்டுமின்றி முகநூலிலும் உங்கள் எழுத்தை வாசித்திருக்கிறேன். நல்ல எழுத்து நடை உங்களுடையது. சிறுவயதில் கோகுலம் இதழின் பதிவு பற்றி அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. வருகைக்கு மீண்டும் நன்றி 

  3. உங்களின் மேலான முயற்சி சிறப்பானது. தொடர் வெற்றி நடை போட எனது வாழ்த்துக்கள்.

  4. வாழ்த்துக்கள்! உங்களின் வாசிப்பு பட்டியல் நன்றாக உள்ளது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!

  5. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்
    நீங்கள் சொல்வது உண்மை தான்
    வாசிப்பு நமக்குள் ஏதாவதொரு நல்ல மாற்றத்தை கண்டிப்பாக உருவாக்கும்… நீங்கள் சிறந்த உதாரணமாய் விளங்குகிறீர்கள்
    உங்களின் இந்த நல்லதொரு முயற்சிக்கு வாழ்த்துக்கள்..
    உங்களைப் பின்பற்ற முயல்கிறோம்

  6. சஹானா எண்ணற்ற புதிய தலைமுறை எழுத்தாளர்களையும் வாசகர்களையும் உருவாக்குமென்பதில் ஐயமில்லை. சஹானா, தமிழில் தவிர்க்கமுடியாத ஒரு இணைய இதழாக வலம் வர மனமார்ந்த நல்வாழ்த்துகள்..!

ஆடி மாதம் அம்மன் மாதம் (கீதா சாம்பசிவம்)

நடுவு நிலைமை (சிறுவர்களுக்கான திருக்குறள் கதை)